Advertisement

Responsive Advertisement

கூகுளுக்குப் புதிய சவால்: 'ChatGPT Atlas'



செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட Open AI நிறுவனம் ChatGPT Atlas என்ற புதிய வலை உலாவியை (web browser) வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு Google Chrome-க்கு ஒரு நேரடி போட்டியாக காணப்படுகிறது.

OpenAI-இன் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, Google நிறுவனத்தின் பங்குச் சந்தை மதிப்பு சுமார் 5 சதவீதம் குறைந்தது. உலகளவில் சுமார் 3 பில்லியன் பயனர்களைக் கொண்ட Google Chrome-இன் ஆதிக்கத்திற்கு இது ஒரு புதிய சவாலாகக் கருதப்படுகிறது.


ChatGPT Atlas-இன் சிறப்பு அம்சங்கள்
இந்த புதிய உலாவியில் உள்ள சிறப்பு என்னவென்றால், ஒவ்வொரு முறையும் நாம் ஒரு இணையதளத்தைத் திறக்கும்போது, "Ask ChatGPT" என்ற விருப்பம் தோன்றும். அதைத் தேர்ந்தெடுத்தவுடன், பக்கவாட்டில் ஒரு ChatGPT sidebar திறக்கப்படும். இதன்மூலம் அந்த இணையதளத்தின் உள்ளடக்கத்துடன் ChatGPT-யுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ள முடியும்.

முதலில் ஆப்பிளின் macOS கணினிகளுக்கு அறிமுகமான இந்த உலாவி, விரைவில் Windows, iOS, மற்றும் Android தளங்களிலும் கிடைக்கும்.

2025 செப்டம்பர் மாதம் நிலவரப்படி, Google Chrome உலகளாவிய வலை உலாவி சந்தையில் 71.9% பங்கை தன்வசம் கொண்டிருந்தது.

ஆனால் ChatGPT Atlas வெளியீட்டுக்குப் பிறகு, Google-இன் பங்கு விலை $252.68-இலிருந்து $246.15 வரை சரிந்தது. இதன் விளைவாக, சுமார் $100 பில்லியன் சந்தை மதிப்பு குறைந்தது எனக் கூறப்படுகிறது.

ஏற்கனவே நம் இந்தியரின் செயற்கை நுண்ணறிவான Perplexityயின் Comet Browser வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. நான் கூட அதைத்தான் உபயோகப் படுத்தி வருகிறேன். இந்த ChatGPTயின் Atlas வலை உலாவினை உபயோகப் படுத்தி பார்த்ததில் நன்றாகத் தான் உள்ளது. அதிகமான அளவிற்கு செயற்கை நுண்ணறிவினை பயன்படுத்துபவர்களுக்கு மிகுந்த பயனளிக்கும். சாதாரணப் பயனர்களுக்கு இந்த வலை உலா சற்று அதிகம் என்பது என் கருத்து.

இப்போது கேள்வி — அடுத்த சில ஆண்டுகளில் இணைய உலகின் தலைசிறந்த உலாவியாக இருப்பது Google Chrome தானா அல்லது புதிய வீரர் ChatGPT Atlas ஆவா? அல்லது நம் Comet Browserஆ....

-S.B.

கருத்துரையிடுக

0 கருத்துகள்