Advertisement

Responsive Advertisement

‘வர’ தட்சணை - சசிக்குமார்.கோ



பன்னிரெண்டு வயது காதல் அடுத்த பன்னிரெண்டில் கைகூடியது.

காதல் கைகூடியதால் உறவினர்கள் யாரும் கைகுலுக்க வரவில்லை எங்கள் திருமண நிகழ்விற்கு.

காலங்கள் கடந்தும் கையில் வரவில்லை குழந்தை.

வேண்டாத தெய்வம் இல்லை, கண்ணீர் சிந்தாத நாட்கள் இல்லை.

கடைசியில் எங்கள் கண்ணீர் துளி தீர்ந்துவிட, அழுது கொண்டே அவதரித்தாள் எங்கள் அழகு தேவதை.

அளவுகடந்த அன்புக்கு சொந்தக்காரியானாள் எங்கள் தேவதை, எங்கள் மகள், எங்கள் தாயானாள்.

எங்கள் வீடு முழுவதும் தேவதையின் புகைப்படங்கள்.

செல்லமாகவும், பாசமாகவும் வளர்க்கப்பட்டாலும், படிப்பில் எப்போதும் முதலிடம்.

எங்கள் தேவதையின் வயதும், எங்களின் கவலையும் வளர்ந்து கொண்டே சென்றது.

திருமணத்திற்கு தேவதையிடம் ஒப்புதல் கேட்டோம், முடியாது என்றால் பின்பு ஒருவழியாக ஒப்புதல் வாங்கிவிட்டோம்.

தேவதைக்கு இணை தேடுவதில் இடைவிடாமல் செயல்பட்டு இறுதியாக தேடிபிடித்தோம்.

இறை தூதுவனுக்கு அரசாங்க உத்யோகம் இல்லை என்றாலும், சொந்ததொழில் அளவிடமுடியாத வசதி.

ஆடம்பரத்திற்கும், அழுகைக்கும் குறைவில்லாமல் நடந்து முடிந்தது தேவதையின் திருமணம்.

பக்கத்தில் இருந்தவள் பல மைல் தூரம் சென்றாள்.

பாசமும், முதுமையும், வறுமையும் எங்களை இறுக பற்றிக்கொண்டது.

தேவதை எங்கள் அருகில் இல்லை என்றாலும், எங்களின் தேவைக்கு அதிகமாகவே பணம் அனுப்புவாள்.

தேவதை அனுப்பிய பணத்தில் சிறுக சேமித்து, இருவரும் தேவதையை காண சென்றோம்.

மகிழ்ச்சிக்கு அளவில்லாமல் துள்ளி குதித்தோம் தேவதையும் நாங்களும்.

மகள் வீடு எங்களுக்கு மகிழ்ச்சியான நாட்களை தந்தது.

தேவதையின் ராஜ்யம் தான் புகுந்த வீட்டீலும். 

சொந்த ஊருக்கு போக தட்சணை கேட்டோம்.

திரும்பியும் ‘வர’, தட்சணை கொடுத்து அனுப்பினாள் எங்கள் தேவதை.

தேனி கோட்டம் 
மொபைல் எண் - 6369661255

கருத்துரையிடுக

0 கருத்துகள்