ரஷ்ய சிறையில் மூன்று தூக்குதண்டனைக் கைதிகள் இருந்தாங்க. இறக்கும் முன் அவர்களின் கடைசி மூன்று ஆசைகள் என்னன்னு கேட்கப்பட்டது.
முதல் கைதியின் ஆசை: மது, மாது வேண்டும், லெனின் சமாதிக்கு அருகில் புதைக்கப்பட வேண்டும். அவனது ஆசை நிறைவேறிய பின் தூக்கிலிடப்பட்டான்.
இரண்டாவது கைதியின் ஆசைகள்; நல்ல பெண் மனைவியாக வேண்டும், நல்ல உணவு வேண்டும். ஸ்டாலின் சமாதிக்கருகில் புதைக்கப்பட வேண்டும். அவனுடைய ஆசைகளும் நிறைவேற்றி வைக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டான்.
மூன்றாவது கைதி தனது முதல் ஆசையாக மாம்பழம் கேட்டான். அப்போ மாம்பழ சீசன் இல்லை. எனவே தூக்கு தண்டனை ஆறு மாதம் ஒத்தி வைக்கப்பட்டது. ஆறு மாதத்திற்குப்பின் மாம்பழம் வாங்கிக் கொடுத்து இரண்டாவது ஆசையைக் கேட்டனர். செர்ரிப்பழம்னு பதில் வந்தது. அப்போ செர்ரிப்பழ சீசன் இல்லை. அதனால மறுபடியும் தூக்கு தண்டனை ஆறு மாதம் தள்ளி வைக்கப்பட்டது, பின் செர்ரிப்பழம் வாங்கிக் கொடுக்கப்பட்டது.
மூன்றாவது ஆசையாக அவன் சொன்னது, “என் உடல் தற்போதைய அதிபரின் சமாதிக்கருகில் புதைக்கப்பட வேண்டும்” என்றான். அதிகாரிகள் அதிர்ந்து விட்டனர், “என்ன சொல்கிறாய், நீ? அவர் உயிருடன் அல்லவா இருக்கிறார்!”
கைதி அமைதியாகச் சொன்ன பதில், “அவர் இறக்கும் வரை நான் காத்திருக்கிறேன்.”
- கே.பாக்யராஜின் பதில்கள் டிசம்பர் 2013

0 கருத்துகள்