Advertisement

Responsive Advertisement

'AI' மூலம் புடவை அணிந்த புகைப்படங்கள்: இணையத்தை கலக்கும் புதிய ட்ரெண்ட்


சமூக வலைத்தளங்களில் தற்போது மிகவும் பிரபலமாகி வரும் ஒரு விஷயம், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் புகைப்படங்களை உருவாக்குவது. குறிப்பாக, கூகிளின் ஜெமினி 2.5 (அதாவது, 'பனானா ஏஐ') போன்ற கருவிகள் இந்த டிரெண்டை மேலும் பிரபலமாக்கி வருகின்றன. இதை இளைஞர்கள், குறிப்பாகப் பெண்கள், பெரிய அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.


எப்படிச் செய்யப்படுகிறது?
இந்த AI தொழில்நுட்பம், நாம் கொடுக்கும் உள்ளீடுகளுக்கு (prompts) ஏற்பப் புகைப்படங்களை உருவாக்கும் ஆற்றல் கொண்டது. நாம் ஒரு புகைப்படம், என்ன மாதிரியான உடை, பின்னணி, மற்றும் தோற்றம் வேண்டும் எனத் தெளிவாக வார்த்தைகளில் விவரிக்க வேண்டும். இந்த உள்ளீடுகள் உள்ளூர் மொழிகளான தமிழிலும் கொடுக்க முடியும் என்பது இதன் சிறப்பம்சம்.

இணையம் அல்லது மொபைலில், கூகிள் ஜெமினி செயலி வழியாகக் create imageஐ திறக்க வேண்டும்.

நீங்கள் மாற்ற விரும்பும் புகைப்படத்தை இதில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

உங்கள் புகைப்படம் எந்த நிறப் புடவை அணிய வேண்டும், என்ன மாதிரியான சிகை அலங்காரம் (hairstyle) இருக்க வேண்டும், பின்னணியில் என்ன இடம் இருக்க வேண்டும் போன்ற அனைத்து விவரங்களையும் உள்ளிட வேண்டும்.


இதன் மூலம், உங்களுடைய சாதாரணப் புகைப்படம், புடவை அணிந்த புகைப்படமாகவோ, ரெட்ரோ (retro) பாணியில் கருப்பு-வெள்ளைப் புகைப்படமாகவோ, அல்லது 3D படமாகவோ துல்லியமாக மாற்றப்படும். பல பெண்கள் தங்கள் புகைப்படங்களைப் பதிவேற்றி, அவற்றைச் சேலை அணிந்திருப்பது போல மாற்றிச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

இது ஒரு பொழுதுபோக்காகவும், தனிப்பட்ட படைப்பாற்றலை வெளிப்படுத்துவதற்கான ஒரு வழியாகவும் இருந்தாலும், இதில் சில ஆபத்துகளும் உள்ளன. AI-யால் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள், சைபர் குற்றவாளிகளால் தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதாகக் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

எனவே, இதுபோன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் போது, நமது தனிப்பட்ட தகவல்களையும் புகைப்படங்களையும் கவனமாகக் கையாள வேண்டும். பொழுதுபோக்குக்காகப் பயன்படுத்தினாலும், பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மிகவும் அவசியம். உருவாக்கிப் பார்க்கலாம் தவறான செயல்களுக்கு துணைப் போகாமலோ செய்யாமலோ இருந்தால் நலம்.

பயன்படுத்தி பார்க்க சில பிராம்ப்ட்கள் (For Try only)
இதுமாதிரி வேண்டுமென்றால்....
Prompt 1: “Turn the subject into an iconic Bollywood heroine wearing a flowing red chiffon saree, with hair styled in gentle, soft waves. Set against a warm, minimalist backdrop, the scene should be bathed in glowing sunset light to create a romantic and dramatic atmosphere.”

இதுமாதிரி வேண்டுமென்றால்....
Prompt 2: "Generate a retro, vintage-inspired image, bright yet grainy, based on the uploaded photo. The girl should wear a flawless red chiffon saree in a Pinterest style aesthetic, exuding a 90s movie baddie vibe. Her dark brown, silky hair features a small flower tucked in, with a gentle wind adding a romantic touch. She stands before an old wooden door, where deep shadows and dramatic contrasts lend a mysterious, artistic feel. Her pose should hint at her adjusting her hair, creating a moody, cinematic, and enchanting atmosphere."

இதுமாதிரி வேண்டுமென்றால்....
Prompt 3: "Transform this individual into a classic portrait wearing a blue Banarasi saree, with a flower delicately placed in the hair. Use warm, golden lighting to create a soft, artistic glow. The backdrop should be textured yet minimal, reminiscent of an art-house poster."

இதுமாதிரி வேண்டுமென்றால்....
Prompt 4: “Turn the uploaded photo into a cinematic 90s Bollywood rain sequence. The subject wears a dark red saree, drenched and glistening, with dramatic rain falling in the background. Lighting is moody and romantic, capturing monsoon nostalgia.”

-S.B.


கருத்துரையிடுக

0 கருத்துகள்