Advertisement

Responsive Advertisement

வீழ்வது யார் அமெரிக்காவா அல்லது இந்தியாவா? USA வின் முதல் எதிரியான இந்தியா! - முரு. தெய்வசிகாமணி


இரண்டாம் உலகப்போரில் இருந்து அமெரிக்காவின் முதல் எதிரியாக ரஷ்யாதான் நீண்டகாலம் இருந்தது. அதற்கு முந்தைய எதிரியான ஜப்பானையும், ரஷ்யாவை ஒரு சேர வீழ்த்த சீனாவை வளர்த்துவிட்டது. சீனா வளர்ந்து வளர்த்த கடா மார்பில் பாய, அதை சமாளிக்க இந்தியாவிற்கு ஆதரவு தந்தது.

அமெரிக்காவின் தேவை சீனா என்பதை கணக்கில் கொண்டுதான், நமக்காக நரி ஒரு போதும் அழுவாது என்பது நன்கு தெரியும். அதே சமயம் இந்தியா உயர்ந்துவிட கூடாது என்பதற்காக பாகிஸ்தான் முதல் பங்களாதேஷ் வரை, அண்டை நாடுகள் மூலம் இந்தியாவிற்கு குழியும் பறித்தது. 

அதில் பாகிஸ்தானை மையமாக வைத்து, அமெரிக்கா, ஒருபுறம் மறுபுறம் அதற்கெதிரான சீனாவை நமக்கு எதிராகவும் கொம்பு சீவியது. அதாவது அமெரிக்கா-சீனா என்ற ட்ரையோ, பாகிஸ்தான் மூலம் இந்தியாவை வீழ்த்த நினைக்க, ஆபரேஷன் சிந்தூரில் மூன்றுபேருக்கு மட்டுமல்ல, சைடிஸ் துருக்கிக்கும் சேர்த்து இந்தியா 88 மணி நேரத்தில் சமாதிக்கான சேம்பிளை காட்டியது!

ஏற்கனவே இந்தியா பொருளாதார சக்தியாக மாறிவரும் சூழலில், வலிமை வாய்ந்த நாடாகவும் உறுவாகியதால் சீனாவை பின்னால் தள்ளிவிட்டு, இந்தியா அமெரிக்காவின் நம்பர் 1 எதிரியாக மாறிவிட்டது. 

ஆனால் இந்தியா அமெரிக்காவை நேரடியாக போரின் மூலம் தாக்காது என்பது நன்கறியும். ஏனெனில் 54 லட்சம் இந்தியர்கள் அமெரிக்காவில் (2022) வசிக்கிறார்கள். இதில் 50 வருடங்களுக்கு முன்பு சென்றவர்கள் கணக்கில் இல்லை என்பதால் அது 60 லட்சத்திற்கு மேல். அது 1.1 கோடி மெக்ஸிகன்களுக்கு அடுத்தபடியாக வாழும் மிகப்பெரிய, வசதிமிக்க பெரிய எத்னிக் குரூப்.

அப்படியெனில் இந்தியாவின் யுத்தம் போரினால் அல்ல பொருளாதாரத்தால் மட்டுமே இருக்க முடியும். அதையும் இந்தியா தொடங்கவில்லை, அவசரப்பட்டு ட்ரம்ப் டாரிஃப் வார் மூலம் தொடங்கி வைத்துவிட்டார். அதன் விளைவாக இந்தியா தனது வாணிப யுத்தத்தை  நேரடியாக அறிவிக்காமல் சிறு சிறு அறிவிப்பின் மூலம் செய்து வருகிறது. 
அதில் அமெரிக்கா எதிர்பார்க்காத மிகப்பெரிய சிக்கல் என்னவென்றால் BRICS நாடுகள் இணைந்து, அவர்களுக்குள் புரிதலோடு செய்த அட்டாக், அமெரிக்காவை ஏற்கனவே ஆட்டி, அசைத்துவிட்டது என்கிறார்கள்.  அதில் இந்தியா செய்த சில முக்கிய நகர்வுகள்:

1. அமெரிக்காவின் ஆயுத ஒப்பந்தத்தை நிறுத்தியது, சில ஆயுதங்களை சத்தமில்லாமல் திருப்பியும் அனுப்பியது. அதில் குறிப்பாக P-6, F-35, Drones, etc. 

அதற்கு மாற்றாக ரஷ்யாவின் Su-57 விமானங்களையும், S-500 வான் பாதுகாப்பையும், Su-30 விமானங்களை அப்கிரேடும் ரஷ்யாவுடன் இணைந்து செய்யப்போகிறது இந்தியா.
இது அமெரிக்காவிற்கு இழப்பு என்று சொல்ல முடியாவிட்டாலும், ரஷ்யாவிற்கான புதிய வருமானமாக பார்த்தால், அது அமெரிக்காவிற்கு எதிரான வளர்ச்சியே!

2. இந்தியாவின் விமான தயாரிப்பை தாமதபடுத்த GE 404, GE 414 எஞ்சின்களை அமெரிக்கா தாமதப்படுத்தியது. இந்தியாவிற்கு மாற்று இல்லை என்பதால் அதை நேரடியாக செய்யாமல் சப்ளை செய்ன் டிலே என்று காரணம் காட்டி தொடர்ந்து தாமதித்தது. அதனால் நமது தேஜஸ் விமான உற்பத்தியை திட்டமிட்டபடி செய்ய முடியவில்லை. 

அதற்கு மாற்றாக F-16 விமானத்தை வாங்க அமெரிக்கா அழுத்தம் தந்தது. ஆனால் அதை மறுத்து ரபஃபேலிடம் 117 விமானங்களை இந்தியாவில் கூட்டாக உற்பத்தி செய்ய உத்தேசித்துள்ளோம். 

ஏற்கனவே ரஃபேல் விமானங்கள், இந்திய-பாக் போரில் சிறப்பாக செயல்பட்டதும், ஐந்து F-16 வீழ்த்தப்பட்டதும், அது அமெரிக்க விற்பனையை ஒரு பக்கம் வீழ்த்த மறுபக்கம் போட்டியாக ஃப்ரான்ஸ் வேகமாக வளர்கிறது.

அதுவல்லாமல் இந்தியா, France - Safron நிறுவனத்துடன் சேர்ந்து M-88/4 என்ற 80-110 kN சக்தி கொண்ட எஞ்சின் டெக்னாலஜி ட்ரான்ஸ்ஃபர் மூலம், முழுவதுமாக இந்தியாவில் உற்பத்தி செய்ய ஒப்பந்தம் உறுதியாகிவிட்டதும் அதன் தேவை இந்தியாவின் ஐந்தாம் தலைமுறை விமானமான AMCA என்றாலும், அதை டௌன்கிரேட் செய்து TEAJAS MK-2/1  க்கும் உபயோக படுத்த முடியும்.

அத்தோடு இந்தியா தனது கப்பற்படைக்கு அமெரிக்காவிடம் வாங்கி வந்த ஹெவி டர்பைன் எஞ்சின்களை மாற்ற உத்தேசித்துள்ளது. அதில் விமானம் தாங்கி கப்பல்களின் செலவினத்தை குறைக்க நியூக்கிளியர் எஞ்சின்களும் அடங்கும். அதே சமயம் நாம் பிரான்ஸிடமும், ஜெர்மனி, ரஷ்யாவிடம் கூடுதல் நீர்மூழ்கி கப்பல்களை வாங்க இருக்கிறோம்.

3. அடுத்ததாக காத்திருக்கும் இன்னொரு பெரிய ஷாக் இந்தியா Boeing நிறுவனத்துடன் ஆர்டர் செய்த 850 விமானங்கள் (மீதம் 600 ஏர்பஸ்). ஆனால் டாடா நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் உற்பத்தி செய்யும் திட்டங்கள் இருப்பதால் இதை கடைசி அட்டாக் லிஸ்டில் வைத்திருக்கலாம். 

4. இவற்றை எல்லாம் உற்பத்தி செய்வது நிறுவனங்கள் என்பதால் அதன் பாதிப்பு மக்களை சென்று சேராது. அதனால் இந்தியா, பிரேசில், சீனா இணைந்து சில முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளது. அது அமெரிக்காவின் விவசாய உற்பத்தி பொருட்கள். 

அவற்றின் மிக முக்கிய ஏற்றுமதியான சோயா பீன்ஸின் மதிப்பு மட்டும் 28 பில்லியன் அமெரிக்க டாலர்கள். அதை பிரதானமாக இறக்குமதி செய்த நாடு சீனா, இந்தியா. சீனா ஏற்கனவே அதன் இறக்குமதியை 90% குறைத்துவிட்டது. 

அதனால் இந்தியாவின் இறக்குமதியை அதிகரிக்க ட்ரம்ப் அழுத்தம் தந்தார். அதில் ஜெனிடிகலி மாடிஃபைட் (மரபணு மாற்றம் செய்யப்பட்ட) சோயா பீனும் அடக்கம், அதை இந்தியா மறுத்துவிட்டது. 

இப்போது இந்தியாவும் சோயாபீன்ஸ் இறக்குமதியை கூடுதல் வரி விதித்தும், அதை பிரேஸிலிடம் இருந்து இறக்குமதி செய்ய முடிவாகிவிட்டது. அதனால் அமெரிக்காவில் கப்பல் கப்பலாக ஏற்றுமதிக்கு தயாராக இருக்கும் சோயாபீன்கள் வாங்குவார் இன்றி காத்திருக்கிறது. அதனால் அமெரிக்க விவசாயிகள் நிலை பரிதாபமாகி இருக்கிறது.

அடுத்ததாக இந்திய பாசுமதி அரிசியை இறக்குமதி செய்ய அமெரிக்க துறைமுகத்தில் அனுமதி மறுக்கப்பட்டது. அதாவது வரியை உயர்த்துவதற்கு முன்பே சென்ற கப்பலைக்கூட இறக்குமதி செய்ய அனுமதிக்கவில்லை. அதன் நோக்கம், வரியை கூட்டிய பின்பு அதன் மூலம் அமெரிக்காவிற்கு கூடுதல் வரி கிடைக்கும் என்பதால்.

ஆனால் இந்தியா அந்த கப்பல்களை திரும்ப கொண்டுவர ஆணையிட்டது. அதை அமெரிக்கா எதிர்பார்க்கவில்லை. அதனால் அரிசி தட்டுப்பாடு உயர்ந்துள்ளது. அதற்கு பதிலாக இந்தியாவின் மிக முக்கிய இறக்குமதியான வால்நட்ஸ் போன்றவற்றை இறக்க தடைவிதித்தது. 

ஆனால் இந்தியா போல அமெரிக்கா அதை திரும்பப்பெறவோ அல்லது மாற்று நாடுகளுக்கு அனுப்பவோ அரசு எந்த உதவியும் செய்யவில்லை. அதனால் அவை கெட்டுப்போகும் நிலையில் உள்ளது. இந்தியா அதுபோன்ற இழப்புகளுக்கு ஈடு செய்வதுண்டு. ஆனால் அமெரிக்காவில் அதுவெல்லாம் சாத்தியமில்லை.

கூடுதலாக மெக்ஸிகோ, கனடா இரண்டும் பல அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிப்பதும், தடை செய்வதால் மிகப்பெரிய பிரச்சினை உறுவாகி உள்ளது. அதற்கு மாற்றாக எந்த நாடும் அமெரிக்க வரி விதிப்பில் எந்த நிலைத்தன்மை இல்லாததால் உணவு பொருட்களை வாங்கவோ அல்லது அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யவோ தயக்கம் காட்டுவதால், அமெரிக்காவில் பெரும் உணவு தட்டுப்பாடு ஏற்படுவதற்கான சூழல் உருவாகிவிட்டது. 

இது அமெரிக்க விவசாயிகளுக்கு மிகப்பெரிய பிரச்சினை. ஏனென்றால், நாம் வாங்க ஆட்கள் இல்லாவிட்டால் தெருவில் எரிந்துவிட்டு செல்லலாம். ஆனால் அமெரிக்காவில் உற்பத்தியான விவசாய பொருட்களை சில நிறுவனங்களுக்கு காசு கொடுத்துத்தான் அழிக்க வேண்டும் என்பதால், விவசாயிகள் நிலை மிக மோசமாகி, போராட ஆரம்பித்துள்ளார்கள்.

இந்த சூழலில் அமெரிக்கா இறக்குமதி செய்ய மறுத்த பொருட்களை பிரிக்ஸ் நாடுகளான பிரேசில், இந்தியா, ரஷ்யா, சீனா மற்றும் ஆஃப்ரிக்க நாடுகள் வாங்க மாற்று ஏற்பாடுகளை செய்திருக்கிறார்கள். 

இந்த சூழலில் சீனாவில் ஆகஸ்ட் 31 நடக்க இருக்கும் SCO மாநாட்டில் இதுபற்றி பேசியும், பிரிக்ஸின் புதிய உறுப்பு நாடுகள் பரிவர்த்தனையை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

5. அதைவிட அமெரிக்காவிற்கு காத்திருக்கும் அதிர்ச்சி என்பது மிகப்பெரிய அமெரிக்க நிறுவனங்களான Apple, Google, Boeing, GE உற்பட முக்கிய நிறுவனங்கள், ட்ரம்பின் நிலையில்லாத சட்டங்களாலும், வரிகளாலும், அழுத்தங்களாலும் அதன் உற்பத்தியும், திட்டமிடலும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்காவின் வீழ்ச்சியைக்கூட ஏற்படுத்தலாம் என்பதால் தனது மாற்று உற்பத்திக்கூடமாக இந்தியாவை பார்க்கிறார்கள். 

அதன் விளைவாக ஒரு வேளை அமெரிக்கா வீழ்ச்சியை சந்தித்தால் அதை சமாளிக்கவும், அதன் உற்பத்தி பாதிக்காமல் இந்தியாவில் இருந்து தொடரவும் திட்டமிட்டுள்ளார்கள். அதற்கு மிக முக்கிய காரணம் வல்லரசு அமெரிக்காவின் வீழ்ச்சி மட்டுமல்ல, இந்தியாவை அடுத்த வல்லரசாக பார்க்கிறார்கள்.

அதனால் ஆப்பிள் நிறுவனம் பெரிய முதலீடுகளை இப்போது ட்ரம்பின் எச்சரிக்கையை மீறி பெங்களூரில் செய்தது. கூகுள் ஆசியாவின் தனது மிகப்பெரிய டேட்டா செண்டரை ஹைதராபாத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளது. அதுபோல Microsoft, GE, TESLA போன்றவை, மற்ற நிறுவனங்களின் திட்டமிடல்கள் ஏற்கனவே தொடங்கி விட்டதாக சொல்கிறர்கள். 

அதில் அமெரிக்க முதலீடுகளின் ஒற்றைப்புள்ளி என்று சொல்லும் ப்ளாக்ராக் ரிலையன்ஸுடன் Jio Finance ல் பெருமளவு முதலீடு செய்துள்ளார்கள். அப்படியெனில் ட்ரம்ப் எல்லை மீறினால் அவரின் கண் முன்னால் எல்லாம் கைவிட்டுப்போகும். அது ஏற்கனவே முடிந்துவிட்டதாக சிலர் சொல்கிறார்கள்.

6. இந்த சூழலில் பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் அனைவரும் சீனாவில் சந்தித்து, டாலருக்கு மாற்று குறித்து முடிவெடுக்கப்படலாம். அதாவது 91% உலக வர்த்தகத்தின் கரன்ஸியாக இருந்த, அமெரிக்க டாலர் இப்போது முன்னெப்போதும் இல்லாத அளவான 58% த்துக்கு குறைந்துவிட்டது. பிரிக்ஸ் மாற்று வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டால் அது 50% க்கு கீழே குறையவும் வாய்ப்புண்டு. 

அப்படி நடந்தால் எற்கனவே வரி விதிப்பின் மூலம் பணவீக்கம் மிக அதிகமாக இருக்கும் சூழலில், உலகளவில் ரிசர்வ் கரன்ஸியாகவும், பாண்டுகளாகவும் இருக்கும் இந்த டாலர் இழப்பை சரி செய்ய வெளிவந்து, அதன் மதிப்பிழப்பு மிக மோசமான பணவீக்கத்தை ஏற்படுத்தலாம். 

அதன் காரணமாக அமெரிக்கா அனைத்து வரிகளையும் குறைக்க வேண்டும். ஆனால் ட்ரம்பர் அதையெல்லாம் புரிந்துகொள்பவரோ அல்லது சரியான ஆலோசனையை ஏற்பவரோ அல்ல. 

80 வருட சரித்திரத்தில் உலகை அடிமைகளாக நினைத்து ஆண்ட அமெரிக்கா தன்னை சாதாரண ஒரு நாடாக தாழ்த்திக்கொள்ளும் மனப்பான்மை அதனிடம் எப்போதும் இருந்ததில்லை. அதை மீறி தனது வல்லரசு பட்டத்தை இழக்கவோ அல்லது எதிர்த்து இன்னும் மோசமான சூழலை சந்திக்கவோ வேண்டும்.

அதனால் அமெரிக்கா மிகப்பெரிய உள்நாட்டு பிரச்சினையை ஏற்படுத்தக்கூடும். ஏற்கனவே தெருக்களுக்கு வந்து போராடும் மக்கள், எல்லை மீறினால் முக்கிய மாநிலங்களான கலிஃபோர்னியா, டெக்ஸாஸ் போன்றவை அமெரிக்காவில் இருந்து பிரிந்து செல்வதற்கும் வாய்ப்புண்டு.

அதற்கு இந்தியா மீது பொருளாதார தடையை அமெரிக்கா விதிக்கலாம். அதை பிரிக்ஸ் நாடுகள் எப்படி சந்திக்க, சமாளிக்க போகிறது என்பது டிரில்லியன் டாலர் கேள்வி!
அமெரிக்கா தனது வல்லரசு பட்டத்தை இழக்க ஒருபோதும் விரும்பாது. அப்படியெனில் அதற்கான மாற்றாக உருவாகிய இந்தியாவை வீழ்த்தியே ஆகவேண்டும், அல்லது வீழ வேண்டும் என்பது விதி!

அதற்கு பதிலாக, உலகை இணைத்து அமெரிக்காவிற்கு எதிராக திருப்பியதில் மிக முக்கிய பங்காக இந்தியாவையும், மோடியையும் பார்க்கிறது டீஃப் ஷிட் ஆஃப் அமெரிக்கா. அதனால் நமது பிரதமரின் ஆட்சியை வீழ்த்தவோ அல்லது விமான விபத்து போன்ற வகையில் எலிமினேட் செய்யக்கூட அமெரிக்கா தயங்காது! 

அது முடியாவிட்டால் அதே டீஃப் ஷிட் ஆஃப் அமெரிக்கா ட்ரம்பருக்கு குட் பை சொல்லவும் தயங்காது என்பதை கென்னடி விஷயம் போன்று இரண்டு முன் உதாரணங்கள் உண்டு!

இந்தியாவிற்காக எல்லாவற்றையும் செய்து, தனக்கென எதையும் எடுக்காமல், உயிரையும் கொடுக்க தயாராக இருக்கும் பிரதமர் மோடிக்கு, இல்லை இல்லை அவர் உருவாக்க நினைக்கும் இந்திய தாய் திருநாட்டிற்கு நாம் என்ன கைமாறு செய்யப்போகிறோம்!

நாம் யாரையும் வீழ்த்தி வாழ விரும்பியதில்லை, ஆனால் நம்மை வீழ்த்த நினைத்தவர்களை வீழ்த்த தயங்கியதில்லை.

முகநூல் பக்கத்திலிருந்து...

கருத்துரையிடுக

0 கருத்துகள்