Advertisement

Responsive Advertisement

என் காதலி....யார் சொல்லவா?



பிறை நிலவென நான் நினைத்தேன்
அல்ல...
அது தன் நுதல் வடிவம் தான் என்றாள்

வில்லென நான் நினைத்தேன் ..
அல்ல....
அது தன் வளைபுருவம் என்றுரைத்தாள்

அம்பென ஐயமுற்றேன்...
அல்ல
அது தன் விழிப்பார்வை வீச்சு என்றாள்

பட்டாம்பூச்சியோ என்றேன்
அல்ல... 
படபடக்கும் தன் இமைகள் என்றாள்

கருவண்டின் கருமைதனைக்
கருவிழியில் கலந்திருந்தாள்

பசுந்தளிரைக் கரம் என்றாள்
பவளத்தினை நகம் என்றாள்

ஆழி தந்த சங்கொன்றை 
தான் கொண்ட கழுத்தென்றாள்

செவ்வான நிறமதனை 
சிரிப்பதிலே சிதறடித்தாள்

கனிகள் தரும் வடிவமதை தன்
பருவம் தந்த செழிப்பென்றாள்

வெள்ளமதின் சுழல் ஒன்றை 
வயிற்றினிலே வடிவமைத்தாள்

சந்தனமும் பொன் தகடும் ...
அல்ல....
அது தன் அங்கம் கொண்ட நிறமென்றாள்

அழகான இடைவளைவை 
உடை கொண்டு தான் மறைத்தாள்

வேய் தந்த குழல் இரண்டை
காலிரண்டாய்க் காண்பித்தாள்

பாதமல்ல தாமரை என்றென்
வாதத்தினைத் தான் மறுத்தாள்

பைங்கிளியின் பாஷைதனைத்
தான் பேசும் மொழி என்றாள்

சூல் கொண்ட மேகம்தனைத்
தன் சிரம் கொண்ட குழல் என்றாள்

அலைகடலின் ஆழத்தின் அளவுள்ள
அழகுடையாள்.

சிற்பியின் கை செய்தெடுத்த
செப்புச் சிலை வடிவுடையாள்.

முற்பிறவி பயனால் கிடைத்த
முழுமதி முகமுடையாள். 

R.இராஜசேகரன்
கோயம்புத்தூர் 
Mobile : 6383200936

கருத்துரையிடுக

0 கருத்துகள்