Advertisement

Responsive Advertisement

இந்தியாவின் 'மிஸ்ஸைல் பெண்மணி' - திருப்பதி கண்ணன்


டாக்டர் டெஸ்ஸி தாமஸ், இந்தியாவின் மிஸ்ஸைல் பெண்மணி என்று அழைக்கப்படுபவர்.

இந்தியாவில் ஏவுகணைத் திட்டத்தை வழிநடத்திய முதல் பெண் விஞ்ஞானி என்ற பெருமையைப் பெற்றவர்.

அக்னி ஏவுகணைகளுக்கு துல்லியமான வழிகாட்டுதல் தொழில்நுட்பத்தை Inertial Navigation Systems  வடிவமைத்து, இந்தியாவின் பாதுகாப்பு திறனை உயர்த்தியவர்.

மேலும் ஒரே ஏவுகணையில் பல இலக்குகளை தாக்கி அழிக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கியவர் இவரால் தான்  உலகநாடுகள் மத்தியில் ஏவுகணை தொழில்நுட்பத்தில் பெரும் சாதனை படைத்துள்ளோம் என்று சொல்லலாம்.

புனேவில் உள்ள Institute of Armament Technology-யில் M.Tech (Guided Missile) பட்டம் பெற்றவர்.

Jawaharlal Nehru Technological University (JNTU)-வில் Missile Guidance துறையில் PhD பட்டம் பெற்றவர்.

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில்  Operations Management-ல் MBA முடிச்சவர்.

முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் டாக்டர் A.P.J. அப்துல் கலாமின் வழிகாட்டுதலின் கீழ் அக்னி ஏவுகணைத் திட்டத்தில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது.

அக்னி III : 3,000 கி.மீ. தூரம் செல்லக்கூடிய இந்த ஏவுகணையின் உதவித் திட்ட இயக்குநராகப் பணியாற்றினார்.

அக்னி V : 2011-ல் இந்த ஏவுகணையின் திட்ட இயக்குநராக இருந்து வெற்றிகரமாக சோதனை செய்தார்.

அக்னி V : 5,000 கி.மீ.க்கு மேல் தாக்கும் திறன் கொண்ட, அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லக்கூடிய இந்த நீண்ட தூர பாலிஸ்டிக் ஏவுகணையின் திட்ட இயக்குநராக (2009-2012) பணியாற்றினார். 

இந்த ஏவுகணை 2012 மற்றும் 2018-ல் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

இவர் திட எரிபொருள் அமைப்புகள் (Solid Propellant Systems) மற்றும் வழிகாட்டுதல் அமைப்புகளில் (Guidance Systems) நிபுணத்துவம் பெற்றவர். 

அக்னி ஏவுகணைகளின் Re-entry System 3,000 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையையும், அதிக வேகத்தையும் தாங்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டது.

இவரது பங்களிப்புகளால் AgniPutri  நெருப்பின் மகள் என்று அழைக்கப்படுகிறார்.

இவரின் சாதனைகளை அனைவரும் அறியும் படி செய்ய வேண்டும் அது அவருக்கான மரியாதை மட்டும் இல்லை இவரை போல இன்னும் பல பெண் விஞ்ஞானிகள் இந்தியாவில் உருவாக வேண்டும் என்பதற்காக.

முகநூல் பதிவு 26-08-2025

கருத்துரையிடுக

0 கருத்துகள்