Advertisement

Responsive Advertisement

வாழ்க்கை என்ற புத்தகம் - 3 - ஜே.கிருஷ்ணமூர்த்தி


உங்கள் முகத்தை நீங்கள் பார்த்திருக்கலாம். தலை சீவியிருக்கலாம். முகத்தில் பவுடர் பூசியிருக்கலாம். இதுபோல நிறைய செய்திருக்கலாம். ஆனால் உங்களுக்குள் நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள். உங்களுக்குள் பார்க்கும்போது நீங்கள் ஒரு பழைய மனிதர் என்பதை உணரவில்லையா? தன்னை ஒரு பழைய மனிதராகக் கருதிக்கொள்வது சந்தோஷம் தரும் விஷயம் இல்லைதான். ஆனால் மற்றவர்களுடைய அறிவைத்தான் நாம் நமக்குள் நிரப்பி வைத்திருக்கிறோம். யாரோ ஒருவர், ஒரு ஆசிரியர் சொன்னது, ஒரு குரு சொன்னது, புத்தர் சொன்னது, கிறிஸ்து சொன்னது... என்று பலவற்றை நிரப்பி வைத்திருக்கிறோம். பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் ஆகியவற்றில் படித்திருந்தால் என்ன செய்ய வேண்டும், எப்படி சிந்திக்க வேண்டும் என்பதையெல்லாம் கற்றுக் கொடுத்திருப்பார்கள். நீங்கள் ஒரு செகண்ட் ஹாண்ட் மனிதர் என்பதை உணர்ந்தால் உங்கள் மனதில் உள்ள அந்த செகண்ட் ஹாண்ட் தன்மையை ஒதுக்கி வைத்துவிட்டு கவனிக்க முடியும். 

கொஞசம் கவனியுங்கள்: நாம் முரண்பாடுகளின் மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நம்மிடத்தில் எந்த ஒழுங்குமுறையும் இல்லை. ஒழுங்குமுறை என்பது பொதுவான ஒரு முன்மாதிரி அல்ல. எல்லாவற்றையும் அதற்குரிய சரியான இடத்தில் வைப்பதுதான் ஒழுங்கு. அது, குறிப்பிட்ட ஒரு பழக்கம், சகஜமான செயல்பாடு ஆகியவற்றை விடப் பெரியது. நாம் அபரிமிதமாகக் குழம்பிப் போன, ஒழுங்கற்ற வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை இந்தப் புத்தகத்தின் முதல் அத்தியாயத்தில் காண முடிகிறது. ஒரு விஷயத்தை விரும்புகிறோம்; ஆனால் அதை விரும்புகிறோம் என்று ஒப்புக்கொள்வதில்லை. சொல்வது ஒன்று, செய்வது ஒன்று; நினைப்பது ஒன்று, செய்வது ஒன்று - இப்படி இருக்கிறது நம் நடத்தை. எனவே முரண்பாடு எப்போதும் இருக்கிறது. முரண்பாடு இருக்கும் இடத்தில் மோதலும் இருக்கும். புத்தகத்தை நீங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறீர்கள். ஒழுங்கற்ற முறையில், ஓயாத மோதல்களின் மத்தியில் நீங்கள் வாழ்ந்து கொண்டிருப்பது தெரிகிறது. இந்த மோதல், ஆசை, திருப்தி, யாரேனும் ஒருவருடன் அல்லது நாடு, கருத்து போன்றவற்றுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வது ஆகிய வடிவங்களில் இந்த மோதல் பரவியிருக்கிறது. ஆக, நாம் அரசியல்ரீதியாகவும் மதரீதியாகவும் குடும்ப வாழ்விலும் ஒழுங்கற்ற நிலையில் நாம் வாழ்கிறோம்.

ஒழுங்கு என்றால் என்ன என்று நாம் கண்டறிய வேண்டும்.

- தொடரும்...

தமிழில்: அரவிந்தன்

கருத்துரையிடுக

0 கருத்துகள்