கிராமங்களில் இருக்கும் பள்ளிகளில் பெரும்பாலும் வகுப்பறை மரத்தடியாகத்தான் இருக்கும்.
அப்படி இருக்க போட்டிகள் என்று நடத்தப்பட்டால் பரிசு பொருட்கள் எல்லாம் எதிர் பார்க்க முடியாது.
ஏனெனில் 10.. 12 பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றவர்களுக்கே கூட பரிசு பொருட்கள் கிடையாது, அப்படியிருக்க, 8ம் வகுப்பிற்கு மேல் படிக்கும் மாணவர்களுக்கு அந்த பள்ளியில் சின்ன சின்ன போட்டிகளுக்கு பரிசு வழங்க பள்ளி நிர்வாகம் முடிவு செய்தது.
முதல் பரிசு பென்...
இரண்டாம் பரிசு பென்சில்...
மூன்றாம் பரிசு லப்பர்...
ஆறுதல் பரிசு Maga Lacto சாக்லெட்....
போட்டிகள் நடத்தப்பட்டன..வகுப்பு வாரியாகவும்.
பேச்சுப்போட்டி, பாட்டுப் போட்டி, கட்டுரை போட்டி, ஒப்புவித்தல் போட்டி, விளையாட்டுப் போட்டி.
வெற்றி பெற்றவர்கள் பெரும்பாலும் அந்த அந்த வகுப்பில் நன்றாக படிக்கும் 1, 2 மாணவர்கள் தான்.
அடுத்த நாள் வகுப்பறைக்கு..ஆசிரியர் பாடம் எடுக்க செல்கிறார்.
அந்த மாணவர்கள் பாடத்தை ரப் புக்கில் எழுதுகிறார்கள்.
அதை கவனித்த ஆசிரியர்க்கு ஒரே ஆச்சர்யம்.
வகுப்பறையில் மாணவர்களை பாராட்டி கை தட்டுகிறார்.
காரணம் தெரியாமல் அந்த வகுப்பு மாணவர்கள் திகைக்கிறார்கள். அதன்பின் ஆசிரியர் அந்த ஆச்சரியத்தை விவரிக்கிறார்.
வகுப்பில் பாடத்தை எழுதும் போது ஒவ்வொரு மாணவன் கையிலும் ஒரு பரிசு பொருள் உள்ளது.
அதாவது, பரிசுப்பொருட்களை எல்லா போட்டிகளும் வென்று குவித்தது 1, 2 மாணவர்கள்தான். ஆனால் பரிசுப்பொருட்கள் எல்லா மாணவர் கைகளில் ஒவ்வொன்றாக பண்டமாற்றம் செய்து கொண்டுள்ளார்கள்.
ஆறுதல் பரிசு பெற்றவனுக்கும் பென் மூலம் எழுத வேண்டும் என்ற ஆசை நிறை வேறியுள்ளது.
எஸ்.ராஜேஷ்,
திருவள்ளூர் தபால் நிலையம்.
மொபைல் எண் - 8838883275

0 கருத்துகள்