Advertisement

Responsive Advertisement

தொல் மனிதர்களின் கால வரலாற்றை மாற்றியுள்ள புதிய கண்டுபிடிப்பு!


இஸ்ரேல் நாட்டின் மத்திய பகுதியில் உள்ள தின்ஷெமேத் குகை (Tinshemet Cave) தற்போது உலகின் மிகவும் பழமையான, சடங்குகளுடன் கூடிய மனிதர்களின் அடக்கங்களில் ஒன்றாக கண்டறியப்பட்டுள்ளது. இங்கு அந்நாட்டின் தொல்பொருள் ஆய்வாளர்கள் சுமார் 1 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஆரம்பகால மனிதர்களின் எலும்புகளையும் அதனுடன் சில பொருட்களையும் கண்டுபிடித்துள்ளனர். 


இவை வெறும் எலும்புகளாக அல்லாமல், மிகுந்த கவனத்துடன் அடக்கம் செய்யப்பட்ட நிலையிலும், சில சடங்குப் பொருட்களும் (ceremonial objects) உடன் வைக்கப்பட்டிருப்பதாகவும் தொல்பொருள் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதனால், அந்தக் காலத்திலேயே மனிதர்கள் மரணத்திற்குப் பிறகான வாழ்க்கை, ஆன்மீகம் மற்றும் இறந்தவர்களின் மீது அவர்கள் கொண்டிருந்த அபரிமிதமான மரியாதை உணர்வுகளுக்கு புதிய ஆதாரமாக இது கருதப்படுகிறது.


இந்தக் குகை கண்டுபிடிப்பு, மனிதர்களின் மனசாட்சியும் சமூக உணர்வுகளும் எப்போது உருவானது என்பதைக் குறித்த நம்முடைய புரிதலை சவாலுக்குட்படுத்துகிறது. இதுவரை விஞ்ஞானிகள் மனிதர்கள் அடக்கம் மற்றும் அதனுடன் கூடிய ஆன்மீகச் சடங்குகள் சுமார் 60,000 ஆண்டுகளுக்கு முன் தான் தொடங்கியதாக நம்பினர். ஆனால், தின்ஷெமேத் குகையில் கிடைத்த 1 லட்சம் ஆண்டுகள் பழமையான சான்றுகள், அந்த நம்பிக்கையை முற்றிலும் மாற்றக்கூடியதாக உள்ளது.


இஸ்ரேல் தொல்பொருள் ஆய்வு ஆணையம் (Israel Antiquities Authority) கூறுகையில், இந்த இடம் மனிதர்களின் ஆரம்பகால சமூக அமைப்புகள், உணர்ச்சி பிணைப்புகள் மற்றும் ஆன்மீக நடைமுறைகள் பற்றி பெரும் தகவல்களை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த மகத்தான கண்டுபிடிப்பு உலகளவில் தொல்பொருள் ஆய்வாளர்களிடையே பெரும் ஆர்வத்தை கிளப்பி, மனிதர்களின் ஆரம்ப வரலாற்றை மீண்டும் எழுத வைக்கும் ஒரு முக்கியமான மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. இங்கேயும் 'கீழடி' எல்லாம் இருக்கு அந்த ஆய்வாளர்களை இங்க கூட்டி வாங்கப்பா…..

-S.B.

கருத்துரையிடுக

0 கருத்துகள்