கல்வி எனும் நாற்று நட்டு
அன்பு எனும் ஊற்றெடுத்து
கண்டிப்பு எனும் உரமிட்டு
அறிவை அறுவடை செய்தவர்கள் ஆசிரியர்கள்!
அகரம் தொடங்க சிலேட்டை எடுத்து
சிகரம் தொட தேடிப் பல கற்று
திரும்பத் திரும்ப கற்பித்து
அறிவுக்கண்ணை திறந்ததும்
அகிலம் போற்ற வளர்த்ததும் ஆசிரியரே!
ஏற்றத்தாழ்வுகள் ஏதுமின்றி
தோற்றப் பிழைகளை கருத்தில் கொள்ளாது
அறியாமை என்ற இருளைப் போக்கி
அறிவெனும் ஆகாயப் பந்தலேற
என்றுமே ஏணிப்படியாக இருப்பவர் ஆசிரியர்!
கல்லும் உடையாது சிலையும் சிதறாது
உளி கொண்டு செதுக்கினால்
உடைந்திடுமோ என்று
அன்பு மொழி கொண்டு செதுக்கிட்ட சிற்பிகள் ஆசிரியர்கள்!
ஆசிரியர் பணி அறப்பணி
அதற்கே தன்னை அர்ப்பணி
என்றே வாழும் புனிதப்பணி ஆசிரியர் பணி!
அத்தனை புனிதங்களும் சேர்த்த புண்ணியங்கள் காக்கட்டும் அவர்களை கண்ணியமாய்!
Retd. Postmaster,

0 கருத்துகள்