Advertisement

Responsive Advertisement

நாமக்கல் கவிஞரின் ‘என் கதை’ - பரமேசுவரி


தமிழில் எழுதப்பட்ட மிகச் சிறந்த சுயசரிதை நூல்களின் வரிசையில் நாமக்கல் கவிஞரின் என் கதை நூலை வைக்கலாம். தனித்தனியாக அமைந்திருக்கும் வாழ்க்கை நிகழ்வுகளை ஒரு புனைவு போல அவர் எழுதியிருப்பது இந்நூலின் தனிச்சிறப்பு. அவருடைய வாழ்வின் ஒவ்வொரு காலகட்டத்திலுமான நிகழ்வுகளை விவரிக்கும் இந்நூல், அவருடைய படைப்புத்திறன், சமூகப் பார்வை, இலக்கியப்பயணத்தையும் உள்ளடக்கியது. 

சிறுவயதில் 'என் கதை' படித்த நினைவும் சுவையும் அதன் ஓவியங்களும் என் மனத்தில் பாறையெழுத்தெனப் பதிந்திருக்கிறது. என் இளம்பருவத்தில் படித்த அந்த நூலை இப்பொழுதும் நினைவில் வைத்துக் கொள்ளும் அளவுக்குக் காட்சிகள் கண்ணில் விரியக் கதை சொல்லும் கலை தேர்ந்த ஒரு நூலிது. அந்த ஓவியங்கள் தற்போது கிடைக்கப்பெறவில்லை ஆயினும் கவிஞரின் பிற ஓவியங்களும் அரிய நிழற்படங்களும் பின்னிணைப்பாக இணைக்கப்பட்டிருப்பட்டுள்ளது.

மேலும் கவிஞர் எழுதிய 'தாயார் கொடுத்த தனம்' என்ற நூல் முழுமையும் 'தமிழன் கண்ட அரசு' என்னும் நூலிலுள்ள தன் வரலாற்றுக் கட்டுரைகளும் இந்நூலுள் சேர்க்கப்பட்டுள்ளன. நூலின் பொதுப்பதிப்பாசிரியரான ப.சரவணனின் பதிப்புத்திறம் அனைவரும் அறிந்தது. இந்நூலும் அவரின் உழைப்பைப் பேசும். நூலைப் பெற நுங்கம்பாக்கத்தில் உள்ள பாடநூல் நிறுவனத்திற்கோ சென்னை சென்ட்ரல் மெட்ரோவில் அமைந்துள்ள புத்தகக் கடையையோ அணுகலாம். புத்தகக் கண்காட்சியிலும் கிடைக்கும். ஆன்லைனில் வாங்க,


கருத்துரையிடுக

0 கருத்துகள்