உலகின் கடைசி சாலை முடியும் இடம் நார்வேயில் உள்ளது, அதைத் தாண்டி நிலப்பரப்பே இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
வட துருவத்திற்கு மிக அருகில் உள்ள பகுதிகளில் ஒன்றான நார்வே, பெரும்பாலும் "பூமியின் கடைசி நாடு" என்று அழைக்கப்படுகிறது. ஆனால் நமது கிரகம் ஒரு கோளம் என்பதால் இந்தக் குறிச்சொல்லுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை - அதாவது, அதற்கு தொடக்கமோ முடிவோ இல்லை. இருப்பினும், நார்வேயில் E-69 நெடுஞ்சாலை உள்ளது - இது "உலகின் கடைசி சாலை" என்று அழைக்கப்படுகிறது. ஏனென்றால் இது பயணிகளை வட துருவத்திற்கு மிக அருகில் அழைத்துச் செல்கிறது.
இந்த சாலை முடியும் இடம், மிகப்பெரிய பனிப்பாறைகளும், பனியாக மாறிய கடல்பரப்புமாகக் காட்சியளிக்கும் என்றும் கூறுகிறார்கள்.
ஓல்டர்ஃப்ஜோர்டு என்ற சிறிய நகரத்திலிருந்து நோர்ட்காப் வரை சுமார் 129 கிலோமீட்டர் நீளமுள்ள E69 நெடுஞ்சாலை, ஐரோப்பாவின் வடக்கே உள்ள பொதுச் சாலையாகும்.
நார்வேயில் உள்ள இ-69 நெடுஞ்சாலைதான், உலகின் கடைசி சாலை என்ற பெயரைப் பெற்றிருக்கிறது. இந்த சாலை, வடக்குத் துருவத்துக்கு அருகில் முடிகிறது. இதற்கு மேல் நிலப்பரப்பு இல்லை என்பதால், சாலை ஓரிடத்தில் முடிந்துவிடும் அதிசயத்தை இங்குக் காணலாம்.
ஒரு பொறியியல் அற்புதம்
மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று வடக்கு கேப் சுரங்கப்பாதை. இந்த நம்பமுடியாத அதிசயம் கடல் மட்டத்திலிருந்து 212 மீட்டர் கீழே 6.9 கிலோமீட்டர் நீளமுள்ள கடலுக்கடியில் சுரங்கப்பாதை ஆகும். இது 1999 இல் கட்டப்பட்டபோது, இது உலகின் ஆழமான நீருக்கடியில் சுரங்கப்பாதைகளில் ஒன்றாகும்.
இது உலகின் கடைசி சாலை என்ற அடையாளத்தை மட்டும் நார்வே பெற்றிருக்கவில்லை. நள்ளிரவில் சூரியன் என்ற இயற்கையின் அதிசயத்துக்கும் பெயர் பெற்றிருக்கிறது. வாழ்நாளில் இ-69 நெடுஞ்சாலையில் ஒருமுறையேனும் பயணம் செய்துவிட வேண்டும். ஒருவேளை, நல்ல கோடைக்காலத்தில் அங்குச் சென்றால் நள்ளிரவில் சூரியனைக் காணலாம். ஆறு மாத காலம் முழுக்க பகலாக இருக்கும் என்பதால், நள்ளிரவு நேரத்திலும் நல்ல வெளிச்சம் இருக்கும். சூரியன் தெரியும்.
இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வார்கள் என்பதால் சாலைக்கு அருகே தற்போது விடுதிகள், உணவகங்கள் வந்துவிட்டன. இந்த சாலை வளைந்து வளைந்து செல்கிறது. அதன்பிறகு சாலையும் இல்லை. நிலப்பரப்பும் இல்லை என்று கூறப்படுகிறது.
முகநூலிலிருந்து...

0 கருத்துகள்