அனுபவம் என்பதே புரிகிறது.
பள்ளிக்கூட வாழ்க்கையிலே
முன் பெஞ்சில் அமர்ந்து
முட்டி முட்டிப் படித்து
முதல் மதிப்பெண் பெற்றதெல்லாம்
வேலையற்று இருக்கும்போது
வீண் என்று தெரிகிறது!
ஆசைப்பட்டுக் காதலித்து
கரம் பிடித்து மணமுடித்து
அனுசரிப்பு இல்லை என்று
ரத்து செய்து வந்த பின் தான்
காதல் எல்லாம் பொய் என்று
மெய்யாகப் புரிகிறது!
காசிருக்கும் போதெல்லாம்
வந்து கூடிய உறவும் நட்பும்
காசில்லா வேளையிலே
கைவிட்டுப் போகும்போது
உறவும் நட்பும் குப்பை என்று
உண்மையாகத் தெரிகிறது!
வேலை பார்த்த நாட்கள் எல்லாம்
சிரத்தையோடு பார்க்க எண்ணி
சிரமங்கள் பல சுமந்து
வேலை விட்டு வந்தபின் தான்
வேலை பார்க்க சிரத்தையெல்லாம்
வேண்டாம் என்று புரிகிறது!
ஆதரவின்றி வாழுகின்ற
வாழ்க்கையின் முடிவில் தான்
வாழ்ந்து முடித்த நாட்கள் எல்லாம்
வாழவே இல்லை என்று
வெளிச்சமாய் தெரிகிறது!
-
எழுதியவர் - N.லலிதா,
Retd. Post Master,
Pudukottai HO
Mobile : 9443794845

0 கருத்துகள்