நீ யூஸ் பன்னுற சிம் BSNL ஆ?
இல்ல வோடோபோன்...
சரி தபால் எதுலபோடுற போஸ்ட் ஆபிஸ்லயா?
இல்ல, professional கூரியர்ல...
சரி உன் புள்ளைங்க எங்க படிக்கிது?
பிரைவேட் ஸ்கூல்ல ஏன்னா கோச்சிங் அங்க தானே இருக்கு...
சரி வேலைக்கு எதுல போற?
எங்க ஊரு பழனி முருகன் பஸ்ல...
சரி வீட்டுல உடம்பு சரி இல்லனா எந்த ஆஸ்பெட்டல் போவ?
பிரைவேட் ஆஸ்பெட்டல் தான் நமக்கு டிரீட்மென்ட நல்லா இருக்கனும் இல்ல...
வீட்டுல DD சேனல் பாப்பியா?
அதுல என்ன இருக்கு சன் ஜீ தமிழ். விஜய் டிவி தான் பார்ப்பேன்...
வீட்டுல அரசு கேபிள்தானே வச்சிருக்க?
airtel dish வச்சிருக்கேன்...
சரி பொழுது போக எங்க போவ?
சினிமா ஷாப்பிங்மால் போவேன்...
வீட்டுல சாப்பாடு செய்யலன்னா ஹோட்டல் போவீயா?
எதுக்கு இப்பதான் சுகி இருக்கு, ஜோமேட்டோ இருக்கு போன்பண்ணி சொன்னா கொண்டு வந்து தராங்க...
வண்டிக்கு பெட்ரோல் எங்க போடுற?
நான் ரிலையன்ஸ் பங்குல தான் போடுவேன் காரணம் பெட்ரோல் போட்டா பாயின்ட் கிடைக்கும் எனவே அங்க தான் போடுவேன்...
தீபாவளிக்கு கோ ஆப்டெக்ஸ்ல துணி எடுப்பியா?
ச்சே ச்சே சென்னை சில்க்ஸ் ஆர்எம்கேவி, சாரதாஸ்லதான் எடுப்பேன்...
கால்ல போட்டிருக்கும் செருப்பை தமிழ்நாடு கதர் கடையிலதானே வாங்குன?
No No, BATA show room ல...
சரி ரேசன்ல என்ன மளிகை சாமான் வாங்குவ?
சக்கரை மட்டும் தான், மத்த பொருள் எல்லாம் டிப்பார்ட்மென்ட் ஸ்டோர்ல வாங்கினா பாயின்ட் கொடுத்து கிப்ட் தரான்...
சரி முதலில் என்னிடம் என்ன கேள்வி கேட்ட?
இந்தியாவில் எல்லா தொழில்களையும் தனியாருக்கு ஏன் விடனுமுனு கேட்டேன்...
நீ அரசு நடத்தும் எதையும் பயன்படுத்துவதில்லை, தனியார் நடத்துவதைத்தான் பயன்படுத்தற, ஆனா சமுக வலையில் மட்டுமே தனியாருக்கு விற்பதா என பொங்குவ....
உண்மையில் நீங்கள் எல்லாம் வேறு மாதிரி....
முகநூலில் வந்தது.....

0 கருத்துகள்