இன்று காலை எழுந்ததும் என் மொபைலை பார்த்து பயங்கரமாக Shock ஆனேன், ஏனென்றால் ஒரு மணி நேரம் முன்பு தான் மொத்தமாக அனைத்து காயின்களும் 50% சதவீத சரிவில் போய் இருந்தது. ஒன்றும் புரியவில்லை. ஏன் இந்த குழப்பம்? பின்னர் கொஞ்சம் இன்டெர்நெட்டில் உலா வந்ததில் ஒரு பெரிய வர்த்தக போர் நிகழ்ந்துள்ளது என தெரிய வந்தது. அதைப் பற்றி விலாவாரியாகப் பார்ப்போம்.
சீனா மற்றும் அமெரிக்கா இடையே ஏற்பட்டுள்ள இந்த மோதல், உலகப் பொருளாதாரத்தையே ஆட்டம் காண வைத்துள்ளது. இதன் நேரடி விளைவாக, Cryptocurrency Market மிகப்பெரிய சரிவைக் கண்டுள்ளது, திங்கட்கிழமை நமது இந்தியப் Stock Market-ஐயும் இது பாதிக்கலாம் என்ற Tension நிலவுகிறது.
China-வின் 'Trade Bombshell' மற்றும் Trump-இன் '100% Tariff'
இந்த மோதலின் தொடக்கம் சீனாதான். நவம்பர் 1, 2025 முதல், சீனா, Rare Earth Elements (அரிய கனிமங்கள்) மீது பெரிய அளவிலான Export Controls-ஐ அறிவித்துள்ளது. சீனா இப்போது வெறுமனே கனிமங்களை ஏற்றுமதி செய்வதை மட்டும் கட்டுப்படுத்தவில்லை. வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் ஒரு பொருளில், சீனாவின் அரிய கனிம மூலப்பொருட்கள் 0.1%-க்கும் அதிகமாக இருந்தால், அந்தப் பொருளை அந்தந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூட சீன அரசின் License தேவைப்படும். இது மிகப்பெரிய பின்னடைவை ஏற்றுமதிக்கும் பிற நாடுகளின் இறக்குமதிக்கும் ஏற்படுத்தும்.
தொழில்நுட்பக் கட்டுப்பாடு: அரிய கனிமங்களைப் பிரித்தெடுக்கும், சுத்திகரிக்கும் மற்றும் காந்தங்களைத் தயாரிக்கும் Advanced Technologies மற்றும் இயந்திரங்களின் ஏற்றுமதியையும் கட்டுப்படுத்தியுள்ளது.
ராணுவப் பயன்பாட்டுத் தடை: Defense Sector (பாதுகாப்புத் துறை) தொடர்புடைய எந்தவொரு நிறுவனத்திற்கும் அரிய கனிமப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான Applications தானாகவே Reject செய்யப்படும் என்று சீன வர்த்தக அமைச்சகம் (MOFCOM) தெளிவாக அறிவித்துள்ளது. Smartphones, Electric Vehicles, Defence Technology போன்ற உயர் தொழில்நுட்பத் தயாரிப்புகளுக்கு இந்த கனிமங்கள் மிக மிக அவசியம். உலக விநியோகச் சங்கிலியில் (Global Supply Chain) சீனாவுக்கு இருக்கும் Dominance-ஐ இது உறுதி செய்கிறது.
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனாவின் அனைத்து இறக்குமதிப் பொருட்கள் மீதும் ஏற்கனவே உள்ள வரிக்கு மேல், அதாவது தற்போதுள்ள சுமார் 30% வரிகளுக்கு மேலாக (Over and above) கூடுதலாக 100% Tariff விதிக்கப்படும் என்று அறிவித்தார். இது சீனாவின் பல பொருட்களின் மீதான மொத்த வரியை 130%-க்கும் அதிகமாக உயர்த்தும். இந்த வரி விதிப்பு, US Consumer Goods மற்றும் Electronics விலையை மிக அதிகமாக உயர்த்தும் அபாயத்தைக் கொண்டிருந்தாலும், இது சீனாவை உடனடியாகப் பேச்சுவார்த்தைக்கு வரவைக்கும் ஒரு Tactical Move ஆகப் பார்க்கப்படுகிறது.
மேலும் அமெரிக்காவிலிருந்து சீனாவிற்கு ஏற்றுமதியாகும் "Any and All Critical Software" மீது கட்டுப்பாடு விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த Control, குறிப்பாகச் சீனாவின் AI Development, Cloud Computing மற்றும் High-End Manufacturing துறைகளை நேரடியாகப் பாதிக்கும். ஏனெனில், இந்தத் துறைகள் பலவற்றிற்கு அடிப்படையே அமெரிக்க Software மற்றும் Operating Systems தான். இது உலக வர்த்தக உறவுகளில் ஒரு Severe Escalation ஆகும். இந்த அறிவிப்பு, முதலீட்டாளர்கள் மத்தியில் மிகப்பெரிய Panic-ஐ ஏற்படுத்தியுள்ளது. இதேபோன்று ஒரு அறிவிப்பினை நாளை நமது இந்தியாவின் மீதும் டிரம்ப் விதிக்கலாம். அதனால் தான் நமது சொந்த தயாரிப்புகளை ஊக்குவிக்கவேண்டும் என நீண்ட நாளாகவே கூறி வருகிறோம்.
இந்த சீனா-அமெரிக்கா மோதலின் Impact உடனடியாகப் பிரதிபலித்தது க்ரிப்டோ சந்தையில்தான். 24 மணி நேரமும் இயங்கக்கூடியதல்லவா. பொதுவாக, உலகளவில் Geopolitical Tension அல்லது பொருளாதார Instability ஏற்படும்போது, அதிக Volatility கொண்ட க்ரிப்டோ போன்ற Risk Assets-களில் இருந்து முதலீட்டாளர்கள் பணத்தை வெளியே எடுப்பது வழக்கம்.
ட்ரம்ப்-இன் அறிவிப்பு வெளியான சில நிமிட நேரங்களிலேயே, மொத்த க்ரிப்டோ சந்தையின் Market Capitalization-இல் பல பில்லியன் டாலர்கள் (Billions of Dollars) சரிந்தன. பெரிய காயின் முதல் அனைத்து காயின்களும் 50 சத சரிவை சந்தித்துள்ளது. முன்னணி க்ரிப்டோ கரன்சிகளான Bitcoin மற்றும் Ethereum-இன் விலைகள் ஏகத்திற்கும் திடீரெனச் சரிந்தன (Plunged). இது முதலீட்டாளர்களின் Confidence-ஐக் குலைத்ததுடன், உலக நிதிச் சந்தைகளில் நிலவும் Uncertainty-ஐ தெளிவாகக் காட்டியது.
இந்தியப் பங்குச் சந்தை (Indian Stock Market) என்னவாகும்?
இந்தியா ஒரு Developing Economy என்றாலும், சர்வதேசச் சந்தை நிகழ்வுகளின் பாதிப்பு இந்தியச் சந்தையிலும் நிச்சயம் இருக்கும். திங்கட்கிழமை வர்த்தகம் தொடங்கும் போது, இந்த மோதலின் Shockwave இந்தியச் சந்தைகளிலும் உணரப்படலாம். இதுபற்றி நிபுணர்களின் கருத்தை பார்க்கலாம்.
Opening Gap Down: ஆசிய மற்றும் அமெரிக்கச் சந்தைகளின் மோசமான Performance காரணமாக, திங்கட்கிழமை காலையில் Nifty மற்றும் Sensex குறியீடுகள் Gap Down-ஆகத் திறக்க (Lower Opening) அதிக வாய்ப்புள்ளது.
FII Outflow: சர்வதேசப் பதற்றம் அதிகரிக்கும்போது, Foreign Institutional Investors (FIIs) பாதுகாப்பான Assets நோக்கி நகர்வார்கள். இதனால், இந்தியச் சந்தைகளில் இருந்து முதலீடுகளை வெளியே எடுக்கும் (Outflow) நிலை ஏற்படலாம். இது சந்தையில் மேலும் Selling Pressure-ஐ அதிகரிக்கும்.
Sector-Specific Impact: சீனாவின் அரிய கனிமங்களைச் சார்ந்துள்ள Technology, Automobile மற்றும் Electronic உற்பத்தித் துறைகளைச் சேர்ந்த இந்திய நிறுவனங்களின் Stocks பாதிக்கப்படலாம்.
இத்தகைய Geopolitical Shocks அடிக்கடி நடக்கும்போது, உள்நாட்டுப் பொருளாதாரத்தை அதிகமாகச் சார்ந்திருக்கும், வலுவான Fundamentals கொண்ட Quality Stocks-களில் மட்டும் முதலீடு செய்வது Risk-ஐக் குறைக்க உதவும் என நிபுணர்கள் கருதுகின்றனர். சந்தை நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்ப, அடுத்த சில வாரங்களில் அமெரிக்கா மற்றும் சீனா இடையே ஏதேனும் Negotiation நடக்குமா என்பதைக் கவனிப்பது அவசியம். இந்த நிகழ்விற்கு பயப்படாமல் இதனை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்தி சந்தையில் முதலீடுகளை பார்த்துக்கொள்ளுங்கள், மேலும் ஒரு Positive Angle-இல் பார்த்தால், இந்த Trade War காரணமாக உலக நிறுவனங்கள் சீனாவைத் தவிர்த்து, Alternative Manufacturing Hub-ஐத் தேடலாம். அதாவது பெரிய நாடாக நம் இந்தியாவை நாடலாம். இந்த Opportunity-ஐ இந்தியா சரியாகப் பயன்படுத்திக் கொண்டால், நீண்ட காலத்திற்குப் Positive Impact இருக்கும்.
எனவே, முதலீட்டாளர்கள் இந்தச் சூழ்நிலையை வெறும் Panic ஆகப் பார்க்காமல், Caution மற்றும் Long-Term Vision உடன் அணுக வேண்டியது அவசியம். இந்த Global Turmoil எப்படி இந்தியச் சந்தையில் Reflect ஆகப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
டிரம்ப் கொஞ்சம் பார்த்துய்யா, எவ்வளவு அடி தான் நாங்க தாங்கறது. நோபல் பரிசு வேணா அந்தப் பொம்பளைக்கிட்டேயிருந்து வாங்கித் தரோம். கொஞ்சம் பார்த்து செய்யா…..
-S.B.


.png)
2 கருத்துகள்
சூப்பர்
பதிலளிநீக்குSuperb
பதிலளிநீக்கு